கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 13-வது சீஸனை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுகுறித்த தகவலை சோனி டிவி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
13-வது சீஸன் அறிவிப்பை ஒரு காணொலி டீஸராக சோனி டிவி எண்டர்டெய்ன்மெண்ட் வெளியிட்டுள்ளது. மே 10 முதல் நிகழ்ச்சிக்கான பதிவு தொடங்கவுள்ளதாக இந்த டீஸரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்நிகழ்ச்சியின் 12-வது சீஸனுக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதால்தான் அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.