2003 ம் ஆண்டு ‘மிஸ்டிக் ரிவர்’ படத்திற்கும் 2008 ம் ஆண்டு ‘மில்க்’ படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கியவர் ஹாலிவுட் நடிகர் சீன் பென்.
அமெரிக்க நடிகரான சீன் பென் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் துவங்கியது முதல் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகிறார்.
இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து தன்னிடம் உள்ள ஒரு ஆஸ்கர் விருதை அவரிடம் வழங்கினார்.
ரஷ்யா உடனான போரில் உக்ரைன் வெற்றி பெற அடையாளமாக இதை தான் வழங்கியதாக கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்ய தாக்குதல் துவங்கிய போதே போலந்து எல்லையில் உக்ரைனியர்கள் வரிசையில் காத்திருந்த போது அவர்களைச் சந்தித்து படமெடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சீன் பென்.
https://twitter.com/suzseddon/status/1590138320637468673
தற்போது தனக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை ஜெலன்ஸ்கி-யிடம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் ரஷ்யா உடனான போரில் உக்ரைன் வென்ற பிறகே அதை திரும்ப பெறுவேன் என்றும் கூறியுள்ளார்.