ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடந்த  இரண்டு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். அதுபோல காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன் பாலத்திலும் அவ்வப்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ் கோடி பகுதிக்கு குவிந்து வருவதால், பாதுகாப்பு கருதி  தனுஷ்கோடி செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அனைத்து வாகனங்களுக்கும் புதுரோடு வரை மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.