மும்பை
ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்ள் தீவிரமாக்கப்பட்டன. இதையொட்டி கடந்த 8 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. வரும் பிப்ரவரி 15 வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் அரசின் இந்த முடிவால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் துபே அரசு இன்னும் 10 – 15 நாட்களில் இது குறித்து அரசு முடிவெடுக்கும் என அறிவித்தார்.
நேற்று மகாராஷ்டிர மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்,
“ஜனவரி 24-ம் தேதி முதல் மாநிலத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அதே நாளில் கிண்டர் கார்டன் வகுப்புகளையும் திறக்க முடிவு செய்துள்ளோம். வகுப்புகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி செயல்படும். எங்கள் பரிந்துரைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் அளித்துள்ளார்”
என அறிவித்துள்ளார்.