பியாங்யாங்
ட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

வடகொரிய நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்த செய்திகள் எதையும் அந்நாட்டு அரசு வெளியிடுவதில்லை.    இது குறித்த தகவல்களை வாரத்துக்கு ஒரு முறை உலக சுகாதார அமைப்புக்கு வட கொரியா அளிக்கும்.  அந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு அறிவிப்பது வழக்கமாக உள்ளது.

உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ள போது வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியது.   வடகொரியா சீனாவுக்கு நெருக்கமாக உள்ள நிலையில் பாதிப்பு இல்லாமல் இருக்காது எனச் சந்தேகம் எழுந்தபோது பரவலின் தொடக்கத்திலேயே எல்லைகள் மூடப்பட்டதாக வட கொரியா கூறியது.

உலக சுகாதார அமைப்பின் வட கொரிய பிரதிநிதி எட்வின் சால்வடோர், “வட கொரிய நாட்டில் அனைத்துப் பள்ளிகளும் பாதுகாப்புடன் திறக்கப்பட்டுள்ளன.  இருப்பினும் பொது மக்கள் அதிகம் கூட்டம் கூட தடை விதித்த வட கொரிய அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது” என அறிவித்துள்ளார்.