டெல்லி: தமது தொகுதியில் உள்ள கிராமங்களில் பள்ளி வகுப்புகள் மரத்தடியில் தான் நடக்கின்றன என்று நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமா மாலினி நாடாளுமன்றத்தில் கூறி இருக்கிறார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இப்போது நடந்து வருகிறது. அதில் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
அதன்பகுதியாக, நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமாமாலினி பேசினார். மதுரா தொகுதியின் எம்பியாக இருக்கும் அவர் கூறி இருப்பதாவது: எனது தொகுதியில் பள்ளிக்கூடங்களின் நிலைமை ரொம்ப மோசம்.
நிறைய பள்ளிக்கூடங்களில் போதிய கட்டிடங்கள் இல்லை. பள்ளி வகுப்புகள் மரத்தடியில் நடத்தப்படுகின்றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போதிய கல்வி கிடைக்கவில்லை.
அரசு, தனியார் பங்களிப்பு இணைந்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பள்ளிகளில் வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.