சென்னை: தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரணமாக கடந்த 10 மாதங்களை கடந்தும் கல்வி நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன.  2029 டிசம்பர் முதல் கல்லூர இறுதியா மாணாக்கர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், ஜனவரி முதல் 10, 12ம் வகுப்புகளுக்கு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 8ந்தேதி முதல் அனைத்துகல்லூரிகளும், 9, மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

அதைத் தொடர்ந்து,  மாணவனின் நலன் கருதி 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் விரைவில் திறக்கப்படும் என தகவல் வெளியானது. அவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்,  இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

தற்போது, குறிப்பிட்ட வகுப்புகளுக்கு  மட்டும் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளில்,  98.5% மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்று கூறியவர், மேலும் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என்றும், மாணவர்களுக்கு விரைவில்  டேப் வழங்கப்படும் என்றும் கூறினார்.