ரயில் பாதையின் குறுக்கே பழுதாகி நின்ற பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அப்படியே தவிக்கவிட்டு ஓட்டுநர் மட்டும் தப்பியோடிய சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்குச் சொந்தமான வேன், பொன்னாபுரத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். அதுபோலஇன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தவேன், காந்தி காலணி ஆளில்லா ரயில்வே கிராசிங் அருகே வேன் வந்த்து. அப்போது திண்டுக்கல் – பழனி மார்க்கத்தில் சரக்கு ரயில் வந்துள்ளது. ரயிலை கவனித்த வேன் ஒட்டுனர், அதற்குள் வேகமாக ரயில் பாதையை கடக்க நினைத்து வேனை செலுத்திஉள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக பழுதாகி நடு ரயில் பாதையில் வேன் நின்றுவிட்டது. முயற்சி செய்தும் வேனை இயக்க முடியவில்லை. உடனே ஓட்டுனர் தண்டவாளத்தின் நடுவே வேனை நிறுத்திவிட்டு இறங்கி ஓடிவிட்டார். இதைப்பார்த்து பள்ளிக் குழந்தைகள் பயத்தில் அலறினர்.

இந்த நிலையில், ரயில்பாதையின் நடுவே வேன் நிற்பதைக் கண்ட ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.