பாதுஹி:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதுஹி பகுதியில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் ஒன்று ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பள்ளி வேன்மீது பயங்கரமாக மோதி தள்ளியது.
வேனுக்குள் இருந்த குழந்தைகள் அய்யோ, அம்மா என்று கூக்குரலிட்டனர். சத்தம்கேட்டு அருகிலுள்ளவர்கள் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த பயங்கர விபத்தில் 7 பள்ளிக்குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த பள்ளிக் குழந்தைகள் அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel