சென்னை: அரசு பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது. எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டமும், டாஸ்மாக் கடைகளுமாகவே காணப்படுகிறது. பள்ளி மாணவர்கள் 80வயது முதியவர் வரை ஏராளமானோர் மதுவுக்கும் போதை பழக்கத்துக்கும் அடிமையாகி உள்ளனர். இதனால், பாலியல் சம்பவங்களும், கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 80வயது மூதாட்டி ஒருவரை போதை மயக்கத்தில் இருந்த சில இளைஞர்கள் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் திருவார் அரசு பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சேட்டை செய்தாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். விசாரணையில், திருவிடைமருதூர் அருகே திருநறையூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 56) என்பவர் திருவாரூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளி முடித்து மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு திருநறையூரில் டியூஷன் எடுத்து வந்தார். ஏராளமான மாணவர்கள் அவரிடன் டீயூஷன் படித்தாக கூறப்படுகிறது.
அந்த வகையில், அதே பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் (வயது 16) மாணவியும் இவரிடம் மாலைநேர டியூஷனில் சேர்ந்து படித்து வந்தனர். அப்போது 11ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அவர் பாலியல் சேட்டை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்தார். உடனடியாக மாணவியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேஷை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.