
திருவள்ளூர்.
சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் கழிவறை கட்டும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊர் திருவாலங்காடு. திருத்தணி அருகே உள்ள திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் கொத்தனாருக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.
அதனால் அந்தப் பள்ளி மாணவர்களே தலைமை ஆசிரியரின் உத்தரவால் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் சுமத்து செல்லுதல், சிமெண்ட் கலவையை தூக்கிச் செல்லுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு பணி புரியும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதனால் பெற்றோர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர் படிக்கும் சிறுவர்களை கட்டுமன வேலைக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
[youtube-feed feed=1]