சைக்கிளில் தந்தையை அமரவைத்து 1, 200 கி.மீ.பயணித்த மாணவி
பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்த பள்ளி மாணவி ஜோதி குமாரி.
டெல்லியில், தனது தந்தையுடன் ஊரடங்கில் சிக்கிக் கொண்டார்.
ஜோதியின் தந்தை விபத்தில் காயம் அடைந்திருந்தார்.நடக்க முடியாது.
உடனடியாக ஊருக்குத் திரும்ப நினைத்தார்கள். வாகன போக்குவரத்து முடக்கப்பட்டிருந்ததால் 500 ரூபாய்க்கு ஒரு பழைய சைக்கிளை விலைக்கு வாங்கினார்கள்.
காயம் அடைந்திருந்த தந்தையைச் சைக்கிள் பின்னால் உள்ள கேரியரில் அமர வைத்த ஜோதி, கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
குண்டும் , குழியுமான சாலைகள், வெளிச்சம் இல்லாத இரவுப் பொழுதுகளை ஒருவாரம் கடந்து தந்தையுடன் பத்திரமாக ஊர் வந்து சேர்ந்தார், ஜோதி குமாரி.
டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு வருவதற்கு அவர் பயணித்த தூரம் எவ்வளவு தெரியுமா?
ஆயிரத்து 200 கிலோ மீட்டர்.
– ஏழுமலை வெங்கடேசன்