மும்பை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கொரோனா 2ம் அலையால் நாள்தோறும் அதிக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஏப்ரல் 23ம் தேதி முதல் நடக்கவிருந்த 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது: மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாத இறுதி வாரத்திலும், 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் மாதத்திலும் நடைபெறும். புதுப்பிக்கப்பட்ட அட்டவணை விரைவில் வெளியிடப்படும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் வாரியத்திற்கும் தேர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.