சென்னை:
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது விதிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யவும், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்தவும் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.