சென்னை

மிழகத்தில் உள்ள பள்ளிகளில் உடல் பயிற்சி பாடவேளைக்கு பள்ளிக் கல்வி ஆனையர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டான.  பிறகு கொரோனா பரவல் குறைவு காரணமாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.   ஆயினும் உடல் பயிற்சி பாட  வேளைகள் ரத்து செய்யப்பட்டன.  தற்போது கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 –  9ம் வகுப்பு வரை மட்டும் விளையாட்டு மைதானத்தில் உடல் பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வகுப்புக்களை  கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.

பள்ளிக்கல்வி ஆணையர் இது குறித்து வெளியிட்ட செய்தியில்  ”தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உடல் பயிற்சி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கு தயாராகி வருவதால், அவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது” என உத்தரவு இட்டுள்ளார்.

[youtube-feed feed=1]