டெல்லி: மத்திய அரசு வழங்கும்  கல்வி உதவித் தொகைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.  மத்திய அரசின் தேசிய கல்வி உதவித் தொகை குறித்து இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன், இந்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நிலைகளில் படிக்கும் மாணவர்களுக்காக ஏராளமான அரசு உதவித்தொகைகளை நடத்துகின்றன. நீங்கள் சேர்ந்த சாதி, மதம் அல்லது வகுப்பைப் பொருட்படுத்தாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு உதவித்தொகைகளை பெற முடியும்.

அதன்படி,  2021-22 கல்வியாண்டில் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி படிப்பு உதவித் தொகைக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் மேற்படிப்புக்கு நவம்பர் 30ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் கல்வி நிறுவனங்கள் தங்களது ஆதார் விவரங்களை இணைத்து இணையத்தில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள், பள்ளிகளின் குறியீட்டு எண் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்,  அதற்காக மாணவர்களுக்கு தங்களது குறியீட்டு எண்ணை வழங்க கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவுவிட்டு உள்ளது.

மேலும், கல்வித் தொகை விண்ணப்பிப்பதில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தது கொள்ளலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்தியத் துறை உதவித்தொகை திட்டம் நேரடிப் பயன்கள் பரிமாற்றத்தின் (DBT)
கல்லுரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000/- உதவித்தொகை என விகிதம் மூன்று வருடங்களுக்கு ஆண்டுக்கு ரூ. நான்காவது மற்றும் ஐந்தாவது வருடத்திற்கு 20,000/- உதவியும் வழங்கப்படுகிறது.

இதுபோல பள்ளி மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையம் மற்றும் கல்வி அதிகாரிகள் மூலம் ஆலோசனை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.