டில்லி

ராணுவப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் ஊழல் செய்ததாக 5 லெப்டினெண்ட் கர்னல் உள்ளிட்ட 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.

ராணுவ பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய நடந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கடந்த மாதம் கண்டறியபட்ட்டது.  அதை அடுத்து நாடு தழுவிய ராணுவ ஆட்சேர்ப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது.   உடனடியாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டது.

இதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி பிரிகேடியர் பிரிகேடியர் வி கே புரோகித் சிபிஐ க்கு புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இந்த விசாரணை அடிப்படை மருத்துவமனை, கண்டோன்மெண்ட், இதர ராணுவ நிறுவனங்கள், கபுர்தலா, பதிண்டா, டில்லி, கைதல்,. பல்வால்,. லக்னோ, பரேலி, கோரக்பூர், விசாக பட்டினம், ஜெய்ப்பூர், கவுகாத்தி, ஜோர்கட், மற்றும் சிரங்கோன் போன்ற 30 இடங்களில் நடந்தது.

அப்போது ராணுவ தேர்வு வாரியம் மூலம் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளைச் சேர்ந்தோர் ஆட் சேர்ப்புக்காக லஞ்சம் வாங்கிய விவகரம் தெரிய வந்தது.   அதையொட்டி சிபிஐ 5 லெப்டினெண்ட் கர்னல், மேஜர், நாயக் சுபேதார், சிப்பாய் என 17 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தற்போது கல்வி விடுப்பில் உள்ள லெப்டினெண்ட் கர்னல் பகவா, நாயக் சுபேதார் குல்தீப் சிங் ஆகியோரும் அதிகாரிகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து லஞ்சம் கேட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் லஞ்சம் கோரியவர்களுடன் அவர்களுக்கு உதவியவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.