டெல்லி: ரயில்வே துறை ஒருபோதும் தனியார்மயம் ஆகாது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்துள்ளார்,

டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும்  மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து.

ரயில்வே துறையானது அரசிடம் தான் இருக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் இணைந்து செயல்படும்போது தான் அதிக வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். பயணிகளின் பாதுகாப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது. 2 ஆண்டுகளில் ரயில் விபத்தில் எந்த ஒரு உயிரிழப்பும் நிகழவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.