சென்னை:  மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக உறுப்பினரான கே.ஹரிஷ்-க்கு தமிழக பாஜக பதவ உயர்வு அளித்தள்ளது.  தமிழக பாஜகவில் பதவி உயர்வு பெறுகிறார்

பண மோசடி மற்றும் டிபாசிட்தாரர்களை ஏமாற்றியதாக பாஜக தொண்டர் கே.ஹரிஷ் மீது மாநிலப் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு,  பாஜக மாநில தலைமை அவரை, கட்சியின் தமிழ்நாடு பிரிவு அவரை விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக நியமித்துள்ளது.

பல கோடி மோசடி செய்ததாக தமிழ்கத்தில் பிரபலன தங்க வர்த்த நிறுவனம் மீது தமிழக பொருளாதாரப் பிரிவு  வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளது. இ;நத   தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்களில் பாஜகவைச் சேர்ந்த ஹரிசும் ஒருவர். இந்த நிலையில், ஹிரிஷ்க்கு, பாஜக தலைமை, தமிழ்நாடு பிரிவு அவரை விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளராக நியமித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, விளையாட்டு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவர் எஸ் அமர் பிரசாத் ரெட்டி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில்,  இதுகுறித்து விளக்கம் அளித்து ரெட்டி, ஹரிஷ் ஒரு விளையாட்டு வீரர் என்றும், ஹரிஷ் மாநில மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு  மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ளார்.

ஹரிஷின் வியாபாரத்தின் தன்மை எங்களுக்குத் தெரியாது. அவர்  நீண்ட காலத்திற்கு முன்பே கட்சியில் சேர்ந்தார். அவர்மீதான விளையாட்டு ஆளுமை என்ற நற்பெயரின் அடிப்படையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

ஹரிஷ் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றது மற்றும் விளையாட்டு வீரர்களை அணிதிரட்டியதால் அவர்மீது திமு கஅரசு  அரசியல் பழிவாங்கல் நோக்கில்  வழக்கு பதிவு செய்துள்ளது என்று குற்றம் சாட்டியவர்,   ஹரிஷ் இதுவரை ஏற்கவில்லை என்றவர், அவர்மீதான குற்றச்சாட்டுக்கு  ஹரிஷ் விளக்கம் அளித்த பிறகு பாஜக உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.