டில்லி

டியூரப்பா முதல்வராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

நடந்து கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப் பெற்ற கட்சியான பாஜக வின் சட்டப்பேரவை தலைவர் எடியூரப்பாவை கர்நாடக ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார்.   அதே நேரத்தில் பெரும்பான்மை இருப்பதாக கூறிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸை அவர் அழைக்கவில்லை.   இதை ஒட்டி அந்த அணி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தன.

வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு நள்ளிரவு 2.10 மணி முதல் விடியற்காலை 5.25 மணி வரை விசாரித்தது.   அதன் பிறகு எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடை இல்லை எனினும் அவர் ஆளுநருக்கு  கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதி அளித்த கடிதங்களை இன்று காலை வழங்க வேண்டும் என அந்த அமர்வு உத்தரவிட்டது.

அதை ஒட்டி இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த வழக்கின் விசாரணையை அனைத்துக் கட்சியினரும் ஆவலுடன் எதிரிபார்த்து வருகின்றனர்.

உச்சநீதிமன்ற அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை இல்லை என அறிவித்ததும் மேற்கொண்டு விசாரணை உள்ளதையும் லட்சியம் செய்யாமல் அவர் முதல்வர் பதவி ஏற்றது குறிப்பிடத் தக்கது.