டெல்லி: வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி தேர்வு வெற்றி பெற்றதை எதிர்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நண்பகல் 12 மணியளவில் தீர்ப்பை வழங்குகிறது. லோக்சபா தேர்தலின் போது வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட விரும்பியதாகவும், ஆனால் தேர்தலுக்கு முன்பாக வேட்பு மனுத் தாக்கல் நிராகரிக்கப்பட்டதாகவும் தேஜ் பகதூர் தமது வழக்கில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேஜ் பகதூர் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்தே அவர் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். வழக்கில் நாளை நண்பகல் 12 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படுகிறது.