புதுடெல்லி:

உத்திரப்பிரதேசத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள் குறித்து, நீதிமன்றம் கண்காணிப்பில் சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்சநீதி மன்றம் அறிவித்தது.


பியூசிஎல் அமைப்பின் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் அசோக் பூசன், எஸ்.கே.கவுல் ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில் திருப்தி அடைகிறோம். இதனை முக்கியமானதாக பரிசீலித்து அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

உத்திரப்பிரதேச அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹாத்கி, என்கவுன்டரின்போது விதிமுறைகளைப் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2017-ல் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற 1,100 என்கவுன்டர்களில் 49 பேர் கொல்லப்பட்டனர். 370 பேர் காயமடைந்தனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் என்கவுன்டரை நியாயப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.