சென்னை; தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வு குழு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, பட்டியலின மாணவர்கள் பொறியியல் கல்லூரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய நாளை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குழு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி, பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய நாளை முதல் மாணவர்கள் முன் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பட்டியலின மாணவர்கள் நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொறியியல் கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும், நவம்பர் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும் மாலை 5 மணிக்குள் தற்காலிக இடங்களை மாணவர்கள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வு குழுவின் இந்த முக்கிய அறிவிப்பை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது