டில்லி
மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பஞ்சமி நிலம் குறித்துப் பேசியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. எல் முருகன் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அத்துடன் அவதூறு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு எதிராக எல்.முருகன் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உத்தரவிட்டதோடு, எல்.முருகன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.