புதன்கிழமை அன்று மத்திய அரசிற்குள்ள அரசியலமைப்பை பற்றிய அறிவை சோதனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அது மார்ச் 27 அன்று உத்தரகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்குத் தொடர்பான ஏழு கேள்விகளை கேட்டு மத்திய அரசிடம் பதிலை எதிர்பார்க்கிறது.

Union Minister of State in the Ministries of Parliamentary Affairs Harish Rawat
உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்

மார்ச் 27 அன்று அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ஒதுக்கி ஏப்ரல் 21ம் தேதி உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
Supreme-Court-building-New-Delhi-India
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் வெள்ளிக்கிழமை அன்று ஹரீஷ் ராவத் அரசை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திய பிறகு, உத்தரகண்ட் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வந்தது.
புதன்கிழமை அன்று, சபாநாயகர் தான் சட்டமன்றத்தின் தலைவர் என்று கூறி, உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்விகளை கேட்டது.

  1. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏற்படும் தாமதம் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த அடிப்படையாக இருக்க முடியுமா?
    2. சபாநாயகரால் எம்.எல்.ஏ.க்களின் தகுதியிழப்பு என்பது 356 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் நோக்கத்திற்கான ஒரு பொருத்தமான காரணம் தானா?
    3. சட்டசபையின் நடவடிக்கைகள் மத்திய ஆட்சியை அமுல்படுத்துவதற்கான காரணமாக  ஜனாதிபதி கருதலமா?

 

  1. 175 (2) சட்டத்தின் கீழ் ஆளுநர் அவர் செய்தது போல் நம்பிக்கை வாக்கெடுப்பது பற்றி உத்தரவு பிறப்பிக்க முடியுமா?

 

  1. இருவரும் அரசியலமைப்பு அதிகாரிகளாக இருப்பதால் ஆளுநர் சபாநாயகரிடம் வாக்குகளைப் பிரிக்குமாறு கேட்க முடியுமா?
  2. ஒரு நிதி மசோதா தவறினால் அந்த அரசு பதிவி விலக வேண்டும் என்பது தான் வழக்கம், ஆனால் சபாநாயகர் கூறவில்லையெனில் நிதி மசோதா போடப்படவில்லை என்று வேறு யார் கூறுவது?

 

  1. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் நிலை என்ன?

அடுத்த விசாரணை வரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வப்பதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது, தீர்ப்பின் நகல் கட்சிகளுக்கு  கிடைக்காததால் இரண்டு கட்சிகளுக்கும் சமமாக இந்த முடிவை எடுத்துள்ளது.