டெல்லி: தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்துக்கு  அரியானா மாநிலம் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற தடையை ரத்து செய்தஉச்சநீதி மன்றம் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில், அந்தந்த மாநிலம், மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இந்த கோரிக்களை எழுந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் அதற்கான நடவடிக்கைகளை  மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன்படி, அரியான, பஞ்சாப் போன்ற மாநிலங்களில், தனியார் நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் தாக்கல் மனுவை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றங்கள், சட்ட திருத்த மசோதாவுக்கு  இடைக்கால தடை விதித்தன.

இதை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில அரசுகள்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய காரணமின்றி, இந்த சட்டத்துக்கு  மாநில உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை விதித்துள்ளன. இதை ஏற்க முடியாது என்று, உயர்நீதிமன்ற இடைக்கால தடை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று கூறியதுடன், இந்த வழக்கை பஞ்சாப், அரியானா  உயர் நீதிமன்றங்கள் 4 வாரங்களுக்குள் மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.