டெல்லி

உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது.

தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது.உச்சநீதிமன்றம் தமிழக் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் ஏற்ஜபவே உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த  விசாரணையின்போது,

“மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டு மவுனமாக இருக்கலாமா..? அப்படி மவுனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

‘நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை’ என்று ஆளுந கூறுகிறார் என்றால், ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவரா? அப்படி இல்லையெனில், அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படித் தெரியும்?”

மாநில அரசால் மீண்டும் அனுப்பப்படும் மசோதா மீது ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும், மசோதாவை ஜனாதிபதிக்கு, ஆளுநர் அனுப்பினால், அதன்மீது ஜனாதிபதி என்ன முடிவுகளை எடுக்கலாம்?

என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளணாற்.

தற்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதங்களை முன்வைத்து வருகிறார். வழக்கின் இறுதி விசாரணையில் இரு தரப்பு வாதங்கள் முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.