டில்லி:

வறான குற்றச்சாட்டு காரணமாக பதவிநீக்கம் செய்யப்பட்ட குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதிக்கு ரூ20லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சிவில் நீதிபதி யோகேஷ் எம். வியாஸ்  மற்றும் விஸ்நகரில் உள்ள ஜேஎம்எஃப்சியில் பணி புரிந்தபோது முறைகேடு குற்றச்சாட்டுக் கூறி கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், அவருக்கு இழப்பீடு வழங்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 1981ம் நீதித்துறை பணியில் இணைந்தவர்  யோகேஷ் எம். வியாஸ். அதன் பின் 1992 முதல் 1994 ம் ஆண்டு வரை அந்த மாநிலத்தில் சிவில் நீதிபதியாகவும் மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி வந்தார். அவர் மீது அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக ஜாமின் வழங்கப்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்தது. எனினும், அவர் பணியில் இருந்து விலகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரை மீண்டும் மாஜிஸ்திரேட் பணிக்குக் கொண்டுவர முடியாது என்று தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து தனக்கு  இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு அளித்தனர்.

தீர்ப்பில், முன்னாள் மாஜிஸ்திரேட் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தவறானது என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி பதவிக்குத் தகாத எந்தச் செயலையும் அவர் செய்யவில்லை என்பதை உச்சநீதி மன்றம் உறுதி செய்கிறது. தற்போது அவர் ஓய்வு பெறும் வயதை டந்து விட்டதால் அவரை மீண்டும் நீதிபதியாக நியமிக்க இயலாது. அவர் கடந்த பல ஆண்டுகளாக  பணிபுரியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.20 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிடுகிறோம்.

இத்தொகையை அவருக்கு ஆறு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.”