டில்லி

மூத்த ராணுவ அதிகாரி பற்றிய தவறான தகவலை ஒளிபரப்பியமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஊடக பத்திரிகையாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலச் செய்தித் தொலைக்காட்சியான ”ஹெட்லைன்ஸ் டுடே” வில் ஊடக பத்திரிகையாளரான ராகுல் கன்வால் கடந்த 2010 ஜூலை மாதம் ஒரு நிகழ்வை ஒளிபரப்பினார்.    அந்த கலந்துரையாடல் நிகழ்வில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் மற்றும் இருவரும் கலந்துக் கொண்டனர்.    அந்த நிகழ்வில் ராணுவ பிரிகேடியர் டிக்கூ என்பவர் மீது தொழிலதிபரான வினோத் காந்தி என்பவர் அளித்த புகார் குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த புகாரில் டிக்கூ தன்னை மிரட்டியதாவும் தன்னுடன் நடத்திய வியாபாரங்களில் பல மோசடிகள் செய்ததாகவும் வினோத் காந்தி தெரிவித்திருந்தார்.     இந்த விவாதத்தின் போது  அவர்கள் இருவரும் பேசியதாக ஒரு தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியிடப்பட்டது.    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிகேடியர் டிக்கூ வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் இந்த புகாரில் சம்மந்தப்பட்ட தன்னிடம் ஒளிபரப்பும் முன்பு எந்த கருத்தையும் கேட்காமல் ஓளி பரப்பியதை கண்டித்தும் அந்த தொலைபேசி உரையாடல் பதிவு போலியா என்பதை ஆராயாமல் ஓளிபரப்பியது தவறு எனவும் டிக்கூ குறிப்பிட்டிருந்தார்.   இதனால் தனது வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் அவருடைய பங்குதாரர்கள் பலர் விலகியதாகவும் தெரிவித்தார்.    இதனால் வினோத் காந்தி மற்றும் ராகுல் கன்வால் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோரின் கீழுள்ள அமர்வில் விசாரிக்கப்பட்டது.   அப்போது பிரிகேடியர் டிக்குவிடல்  ராகுல் கன்வால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்,   அவ்வாறு கேட்பதன் மூலம் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.