டில்லி

டில்லி கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலை வரும் ஜூன் 1 ஆம் தேதி திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.  அதைக் குறைக்க கிழக்கு எக்ஸ்பிரஸ் என்னும் பை பாஸ் சாலை ஒன்று அமைக்கப்பட்டது.  இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப் பட்டது. இந்த சாலை முடிந்து பல நாட்கள் ஆகியும் பிரதமர் மோடிக்கு நேரமின்மையால் இந்த சாலை திறக்கப்படவில்லை.

இந்த சாலையை உடனடியாக திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.  தீர்ப்பில், “இந்த கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையின் மூலம் டில்லி நகருக்குள் பயனம் செய்யும் இரண்டு லட்சம் வாகனங்கள் நகருக்குள் வராமல் தடுக்கப்படும். அதனால் டில்லியில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறையும்.

ஆனால் இந்த சாலை பிரதமர் வந்து திறக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டு உள்ளது.    பொதுமக்களின் நலனுக்காக இதை மேலும் தாமதப்படுத்த இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. பிரதமருக்கு நேரம் இருந்தாலும் சரி, இல்லையானாலும் சரி, இந்த சாலை வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட வேண்டும்”  என குறிப்பிடப்பட்டுள்ளது