டில்லி

கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

நாடெங்கும் கொரோனா  பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  இதில் தலைநகர் டில்லியில் நேற்றைய பாதிப்பு 10,774 ஆக இருந்தது.  நேற்றுவரை இங்கு 7.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 11,283 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதில் சுமார் 6.79 லட்சம் பேர் குணம் அடைந்து 34,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டில்லியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.  இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம், சமூக இடைவெளி, உள்ளிட்டவை கடுமை ஆக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணி புரிவோரில் 50% பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  எனவே இன்று முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தத்தம் இல்லங்களில் இருந்தே வழக்கு விசாரணை செய்ய உள்ளனர்.