டில்லி:

பிரதமர்  மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மீது  தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக  உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து பதில்  தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர்  மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பல இடங்களில் பேசி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் அளித்தும்,  இதுவரை பிரதமர் மோடிக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை

இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் பெண் எம்.பி. சுஷ்மிதா தேவ் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமை  தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மறுவிசாரணையை மே 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.