டெல்லி

ச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டுஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

உச்சநிதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி தேதி அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.

ன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு வழங்கியது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்திருந்ததன் அடிப்படையில் இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.