டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் தொண்டு செய்து வரும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வில், இன்சென்டிவ் மார்க் (ஊக்க மதிப்பெண்) வழங்க வேண்டும் என மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் யோசனை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளதால், மருத்துவ மேல்நிலை படிப்புக்கான நீட் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், மருத்துவம் இறுதியாண்டு முடித்த மாணவர்களை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மருத்தவர்கள். தற்போதைய நிலையில், மருத்துவர்கள் தேவை அதிகரித்துள்ளதால், இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் உள்பட மருத்துவ மேற்படிப்புக்கு தயாராகும் மருத்துவர்களையும் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கொரோனா பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதும்போது, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இன்சென்டிவ் மார்க், அதாவது ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மத்தியஅரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்து உள்ளது.