டெல்லி:
கொரோனாவால் உயரிழந்தோர் உடல்களை மசூதிக்குள் புதைக்க தடை விதித்த மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையடுத்து,  மும்பையில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் உடல்களை புதைக்க கூடாது என்றும், மதத்தை பொருட்படுத்தாமல் உடல்களை எரிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சி உத்தரவிட்டது. ‘ உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினால் மும்பை எல்லைக்கு அப்பால் அடக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தைத் தொடர்ந்து,   உடல்களை எரிக்க வேண்டும் என்ற உத்தரவை அடுத்த சில மணி நேரங்களில் மும்பை மாநகராட்சி திரும்பபெற்றது.
ஆனால் இறந்தவர்களின் உடல்களை ஊருக்கு வெளியேதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியது.
இதையடுத்து, இஸ்லாமிய அமைப்பு சார்பில், தங்களது பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்க செய்ய அனுமதிக்கக் கோரியும், பாந்த்ரா குடியிருப்பு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்   மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில்,  பாத்ரா பகுதியானது  அதிக மக்கள்  நெருக்கம் மிகுந்த பகுதி. இங்கு நவ்படா கொங்கனி முஸ்லீம் கல்லறை, கோஜா சுன்னத் ஜமாத் கப்ராஸ்தான் மற்றும் கோஜா இஸ்னா ஆஷாரி ஜம்மாத் கப்ராஸ்தான் என்ற கல்லறைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை புதைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்பின் கோரிக்கையை மும்பை உயர்நீதி மன்றம் நிராகரித்தது.  அந்த பகுதியில்   மக்கள் தொகை 3 லட்சத்துக்கு மேல் உள்ளதால், அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 27 ந்தேதி  இடைக்கால தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக மும்பை உயர்நீதி மன்றத்தில் இடைக்கால உத்தரவில் உச்ச நீதி மன்றம் தலையிடாது என்றும்,  வழக்கு தொடர்பாக 2 வாரத்திற்குள் மும்பை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும்என்று உத்தரவிட்டு மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.
வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹிண்டன் நாரிமன் மற்றும் இந்திரா பானர்ஜி  அமர்வு வீடியோ கான்பரன்சிங் வழியாக விசாரித்தது.