டெல்லி
மோடி மீது நடவ்டிக்கை எடுக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடெங்கும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்து தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி உச்சநீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாத்திமா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் பாத்திமா,
“தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி எப்போதும் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகும். ஆகவே தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாமல் தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்”
எனக் கோரியிருந்தார்.
இன்று இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்காமல் நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி இவ்வாறு நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்யக் கூடாது என அறிவுறுத்தி, மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.