டில்லி
காவேரி தண்ணீர் குறித்து எந்த ஒரு இடைக்கால மனுக்களையும் அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவேரி நீர் பங்கீட்டின்படி இந்த ஆண்டு கர்நாடகா அரசு 63 டி எம் சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தலைமை நீதிபதி மிஸ்ராவின் கீழ் உள்ள அமர்வில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இடைக்கால மனு ஒன்றை தமிழ்நாடு அரசு அளித்தது.
உச்சநீதி மன்றம் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தயாராஇ வருவதால் இரு மாநில அரசும் எந்த இடைக்கால மனுக்களும் தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.