
டில்லி
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறதா என்பதற்கு பதில் அளிக்க தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாடெங்கும் சுமார் 1300 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளதக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்த்தில் பதிவாகி உள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று விசாரித்து வருகிறது. இந்த அமர்வு கைதிகளின் மனித உரிமை மறுக்கப்படுகிறதா என்பது குறித்தும், அவர்கள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் எனவும் அமர்வு கேள்வி எழுப்பியது. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்க தமிழ்நாடு, மகாரஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப், கோவா, மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் அசாம் ஆகிய 10 மாநிலங்களுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
[youtube-feed feed=1]