டில்லி

ஃபேல் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவை விசாரிக உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டசால்ட் இடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் செய்தது.   இதில் மிகப் பெரிய ஊழல் நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் கூறி வருகின்றன.   இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மாதம் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில்  இந்த ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என கூறி நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.    இந்த தீர்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை முன்னாள் பாஜக அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா மற்றும் பிரபல வழக்கறினர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் அளித்தனர்.

இன்று ரஃபேல் வழக்கு தொடர்பான மறு சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளடு.   இந்த விசாரணை நடத்த தனி அமர்வு அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் ரஃபேல் குறித்த மறு சீராய்வு மனுவை விசாரிக்க ஒப்புதல் அளித்தது பாஜக வட்டாரத்தில் சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.