கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் , தொற்று குணமான நிலையில், இணை நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு மாலை 4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவு திரண்டுள்ளனர்.
இதையடுத்து அவரது உடல், அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், அஞ்சலி செலுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை காலை எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், செங்குன்றம் அடுத்த தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.