a
நேற்று இரவு, திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களை, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மடக்கினர். அந்த மூன்று கன்டெய்னர்களிலும் பணக்கட்டுக்கள் இருப்பதாக, கன்டெய்னரில் வந்தவர்கள் தெரிவித்தனர்.   கோவையிலிருந்து ஹைதராபாத்தின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளைக்கு பணத்தைக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் சந்தேகம் அடைந்த தேர்தல் அதிகாரிகள், கன்டெய்னர்களை கோவைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தினர். அந்த கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் இருப்பதாக தகவல் பரவியது.  ஆனால் தேர்தல் அதிகாரி லக்கானி, “கன்டெய்னர்களின் உள்ளே சோதனை செய்யவில்லை. ஆவணங்களை வைத்து 179 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது” என்றார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது. தவிர இந்தப் பணம் யாருக்குச் சொந்தம் என்கிற கேள்வியும் எழுந்தது.
இதற்கிடையே இன்று மாலை, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் உயரதிகாரிகள, பணத்துக்கான ஆவணங்களை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது.