டெல்லி:

நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஏடிஎம்-ல் பணம் எடுக்கவும் ‘ஓடிபி’ முறையை ஜனவரி1 முதல் அமல்படுத்த திட்டமிட்டு உள்ளது.

இதன் காரணமாக பண பரிவர்த்தனையில் மேலும் பாதுகாப்பை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதில் இருந்து தவிர்க்கவும் முடிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, அண்மையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் பல மாற்றங்களையும் செய்து வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 1 முதல் ஏடிஎம்மிலிருந்து பணம் எடுக்கும் போது, ஒடிபி முறையை கொண்டு வர உள்ளது, இந்த ஓடிபி முறையானது ஜனவரி 1, 2020ல் இருந்து நடைமுறையில் இருக்கும் என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்த திட்டமானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அமலில் இருக்கும் என்றும், இந்த ஓடிபி முறையிலான பணம் பெறும் வசதியானது 10,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் போது பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.  இந்த ஒடிபி திட்டமானது எஸ்பிஐயின் அனைத்து ஏடிஎம்களிலும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி பணம் எடுக்கும்போது, வங்கிக்கணக்கு உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு   ஓடிபி அனுப்பப்படும். இந்த ஓடிபி மூலம் பண பரிவர்த்தனைக்கு பயனரை அங்கீகரித்து பணத்தை வழங்கும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த செய்லபாட்டின்போத, பயனர்கள் வழக்கம் போல் ஏடிஎம்மில் நீங்கள் பெற விரும்பும் தொகையை பதிவு செய்த பின், ஏடிஎம் திரையில் ஓடிபி என்ற ஆப்சனை கேட்கும் போது, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை திரையில் கொடுத்த பின்னரே உங்களது பரிவர்த்தனை முடிவடையும்

எனினும் தற்போதைய ஏடிஎம் செயல்பாட்டில் இருந்து எந்த மாற்றமும் செய்யபப்டவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேவேளையில் இந்த ஓடிபி முறை  எஸ்பிஐ தவிர மற்ற வங்கிகளில்  பரிவர்த்தனை செய்யும் போது, இது பொருந்ததாது என்றும் கூறப்படுகிறது.

அதுபோல, மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட கார்டுகள் டிசம்பர் 31 வரையில்தான் செல்லுபடியாகும் என்றும், பயனர்கள் புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளும்படியும் அறிவுறுத்திஉள்ளது.

ஏடிஎம்களில் ஸ்கிம்மர்கள் மூலமாகவும்  தகவல்கள் திருடப்பட்ட பணம் களவாடப்பட்டு வருகிறது என்பதால், அதுபோன்ற மோசடிகளை தடுக்கவே, ஓடிபி முறை செயல்படுத்தப்பட இருப்பதாக எஸ்பிஐ தெரிவித்து உள்ளது.