டில்லி:

எஸ்பிஐ, ஐசிஐசிஐ, பிஎன்பி உள்ளிட்ட பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் வீட்டு கடன் சிறிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எஸ்பிஐ 20 புள்ளிகளை அடிப்படையாக கொண்டு 7.95 சதவீத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல் ஐசிஐசிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி 15 புள்ளிகள் என்ற அடிப்படையில் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளது.

ஹெச்டிஎப்சி அடுத்த வாரம் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்கிறது. வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவைகளுக்கான வட்டி விகிதம் இதன் அடிப்படையிலேயே கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த உயர்வு காரணமாக மாத தவணைகள் சிறிதளவு உயரும்.