Cii4QyvUYAAcv6q
சென்னை: நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தொடர்ந்து பேசி வரும் நிலையில், நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. கடந்த பல நாட்களாகவே தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் நடிகர் பார்த்திபன், “நோட்டாவுக்கு அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும். இப்போது நோட்டாவுக்கு என்று பவர் இல்லாவிட்டாலும் அதிகம்பேர் அப்படி வாக்களித்தால், பிறகு நோட்டாவுக்கும் பவர் வரும்” என்று பேசிவந்தார்.
இதற்கிடையில், நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று  கூறியிருக்கிறார் குஷ்பு.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு சென்னை மந்தவெளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்தார். வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ள பணத்தில் 99 சதவீதம் ரொக்க பணம் அதிகமுகவினருடையதுதான். அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்” என்று கூறினார்.
வாக்களித்த பிறகு குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“இந்தியராக இருப்பதில் பெருமை அடைகிறேன்.  நானும், என் கணவரும் கடமையை உணர்ந்து வாக்களித்துள்ளோம். நீங்கள்? #VOTE100 #NO2NOTA”  என்று தெரிவித்துள்ளார்.
குஷ்பு தனது ட்விட்டரில் வெளியிடும் கருத்துகளோடு நோட்டாவுக்கு நோ சொல்லுங்கள் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.