“பா.ஜ.கவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக பா.ஜ.க.வின் செயல்பாடுகளை எதிர்த்து நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்து வருகிறார். அவரிடம், “பா.ஜ,வை மட்டும் குற்றம் சொல்கிறீர்களே” என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.

 

அதற்கு பிரகாஷ்ராஜ் தெரிவித்ததாவது:

“இந்தியா சுதந்திரமடைந்த பிறகு எல்லா கட்சிகளும் மக்களுக்கு துரோகம் செய்தன.. செய்கின்றன.

ஆனால் மற்றகட்சிகளைவிட பாஜக ஏன் வில்லனாக தெரிகிறது என்றால், அவர்கள்  நமது அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற நினைக்கிறார்கள்.  எல்லா மொழிகளும் செத்துவிட வேண்டும்..  இவர்கள் மொழியை நாம் கற்க வேண்டும் என்கிறார்கள்.

இந்தியா என்பது எல்லாருக்குமானது. இங்கே அனைவருக்கும் அனைத்துச் சுதந்திரமும் உண்டு. பாஜகவினரோ பலரை வெளியேறச் சொல்கிறார்கள். தலித், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்தவர்கள் என்று பலரும் எங்கே செல்வார்கள். அனைவரும் நம் நாட்டின் குடிமக்கள்தானே!

நோய் ஏற்பட்டால் ரத்தம் பரிசோதிப்பது முறை.  இவர்களோ ரத்தத்துக்குள் ஜாதி பார்க்கிறார்கள்.

பாஜகவுக்காக சிந்தனை இல்லை. வேறு யாருக்கோ வேலை.. நாட்டுக்காக வேலை.

ஆகவே மிக மோசமான பாஜகவிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதன் பிறகு  எல்லா கட்சிகளையும் நாம் கேள்வி கேட்கணும்” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

மேலும், “ஆரம்பத்தில் நான் ஏதாவது கட்சியில் சேரலாமா என்று நினைத்தேன். பிறகு நாமே கட்சி ஆரம்பிக்கலாமா என்று சிந்தித்தேன். ஆனால் இப்போதைய தேவை  மக்களுக்கான குரல்தான். அந்த குரலாக நான் ஒலிக்கிறேன்” என்று தெரிவித்தார்.