சென்னை: 2ம் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடம் இருந்து பெற்று புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கி உள்ளன. கடந்த வாரம் தொடங்க வேண்டிய பள்ளிகள், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட தொடங்கி உள்ளன. இந் நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது 2ம் பருவத்திற்குரிய 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான, மீண்டும் பயன்படுத்தும் வகையிலுள்ள, அனைத்து பாடப் புத்தகங்களையும் மாணவர்களிடம் இருந்து பெற்று பள்ளி புத்தக வங்கியில் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.