அமெரிக்க பெண்ணுடன் சாட்டிங் செய்து அதை இணையத்தில் பரபரப்பாக்கிய 19 வயது சவுதி இளைஞர் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த அபுசின் (வயது 19), இவர் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த கிறிஸ்டினா க்ரோகெட் என்ற 21 வயது பெண்ணுடன் அடிக்கடி சாட் செய்திருக்கிறார்.
சாட்டிங்கில் கொஞ்சம் வார்த்தை எல்லை மீறல்களும் இருந்திருக்கிறது. இந்த சாட்டிங் யூநவ் என்ற இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு பரபரப்பாகியிருக்கிறது.
அபுசின்னின் நடவடிக்கை இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானது என்று சொல்லி சவுதி போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டணை விதிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
Patrikai.com official YouTube Channel