மெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வேற்றுக்கிரகவாசிகளை தொடர்புகொள்ள விண்வெளிக்கு அனுப்பிய “தங்கப்பதிவு” இப்போது பிரதிகள் எடுக்கப்பட்டு பொதுமக்களிடம் விற்பனைக்கு வந்துள்ளது.
gold
1977-ஆம் ஆண்டு நாசா வாயேஜர் என்ற விண்கலம் வாயிலாக மனித இனம் மற்றும் நாம் வாழும் பூமி தொடர்பான தகவல்கள் அடங்கிய பதிவு ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. இதற்கு நாசா Golden Record என்று பெயரிட்டிருந்தது. இந்த பதிவை ஒருவேளை ஏலியன்கள் பார்த்தால் அவர்கள் நம்மைப்பற்றி அறிந்து நம்மை தொடர்பு கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தத் தங்கப்பதிவில் பீத்தோவனின் இசை உள்ளிட்ட 27 இசை டிராக்குகளும், 55 மொழிகளில் வாழ்த்துகளும், குழந்தை அழும் சத்தம், கடல் அலை, இடி முழக்கம் மற்றும் எரிமலை குமுறும் சத்தம் ஆகியவற்றுடன் பல்வேறு படங்களும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப்பதிவு அனுப்பப்பட்டு 40 வருடங்கள் ஆகியிருப்பதை கொண்டாடும் வகையில் தங்கபதிவு பிரதிகள் எடுக்கப்பட்டு 10 டாலர்கள் முதல் 98 டாலர்கள் வரையிலான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.