சவுதி இளவரசர் ஒருவருக்கு கொலைக் குற்றத்துக்காக அந்நாட்டு அரசு மரணதண்டனையை சமீபத்தில் நிறைவேற்றியது நினைவிருக்கலாம். அது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அச்சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் இன்னொரு சவுதி இளவரசருக்கு சவுக்கடி தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
ஆனால் எந்த குற்றத்துக்காக அவர் இந்த சவுக்கடி தண்டனையை பெற்றார் என்பது வெளியிடப்படவில்லை. மேலும் அந்த இளவரசருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சவுக்கடி தண்டனை கடந்த திங்களன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக அவர் அடிவாங்கும் உடல் தகுதியோடு இருக்கிறாரா என்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி கருத்து சொல்ல அரசு தரப்பு பேச்சாளர் மறுத்துவிட்டார். சவுதி அரேயா இஸ்லாமிய மார்க்கத்தின் பிறப்பிடமாகும். இங்கு இஸ்லாமிய சட்டங்கள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.