மினா:
புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் புதிய சிம் கார்டு வழங்கப்படும் என சவுதி அரசு அறிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்களின் தங்கள் வாழ்நாள் கடமையாக சவுதி அரேபியா வுக்கு புனித ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் உறவினர் களோடு உறவாடும் வகையிலும், தங்களது ஹஜ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகை யிலும், இன்டர்நெட் வசதியுடனான சிம் கார்டுகளை இலவசமாக வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, சுமார் 1 மில்லியன் சிம் கார்டுகளை இலவசமாக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பயணிகளின் வசதிகளை கருத்தில்கொண்டு, ஜித்தா விமான நிலையத்தில் பயணிகளுக்கு இலவச சிம்கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஹஜ் கடமைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தருவோருக்கு பல நலத்திட்டங்களை செய்து வரும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மற்றும் இலவசரர் இந்த இலவச சிம்கார்டு திட்டத்தை அறிவித்து உள்ளனர்.
இதுகுறித்து கூறிய இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர், ஹஜ் பயணிகளுக்கு சவூதி தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம்கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி பெற்று இலவச மாக வழங்கும் என்றும், இந்த சிம் கார்டுகளில், இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். மேலும் மெக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசரகால சேவைப் பிரிவுகளின் எண்களும் இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.